சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுகவின் வெற்றி உறுதியானது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, தனக்கன்குளம் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், மக்களின் நிலை அறிந்து சேவை ஆற்றி வரும் ஒரே கட்சி அதிமுகதான் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், திமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் செல்லுபடியாகாது எனவும், திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதியானது எனவும் குறிப்பிட்டார். பிரசாரத்தில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை

NewsJ Election

தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்

admin

சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன் அணியினர் கலக்கம்

NewsJ Election

Leave a Comment