அதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அதிமுகவினரை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடுங்குவதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, காமராஜ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். வெள்ளபட்டி, துபாஷ் பட்டி, தருவை குளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பிரசாரம் செய்த அமைச்சர்களுக்கு, அதிமுக கூட்டணி கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சிப்பதாக கூறினார். மேலும், அதிமுகவினரை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சி நடுங்குவதாக விமர்சித்த அவர், தாங்கள் வலை வீசினால் 50 திமுக எம்.எல்.ஏக்கள் வலையில் சிக்கிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

Related posts

தேனியில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

NewsJ Election

சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன் அணியினர் கலக்கம்

NewsJ Election

நாட்டிலேயே மின்மிகை மாநிலமாக தமிழகம் இருக்கிறது

NewsJ Election

Leave a Comment