மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு


மக்களவை தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி 27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகாரில் 5 தொகுதிகளுக்கும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதேபோல் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 71 மக்களவை தொகுதிகளில் நடைபெறும் இன்றைய தேர்தலில் சுமார் 12 கோடியே 79 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். முன்னதாக வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தமிழக விவசாயிகள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்பு

NewsJ Election

100 %வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

NewsJ Election

காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய், போலித்தனம் நிறைந்தது-பிரதமர் மோடி

NewsJ Election

Leave a Comment