காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தீவிர பிரசாரம்

காஞ்சிபுரம் மக்களவை மற்றும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சி.வி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சி.வி.ராதாகிருஷ்ணன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் , கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், அதிமுக மாவட்ட ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

Related posts

முதல்வரின் இன்றைய தேர்தல் சுற்றுப் பயண விவரம்

NewsJ Election

ஊருக்கு தான் உபதேசம் -இது தான் திமுகவின் ஸ்டைல்

admin

அதிக வாக்குகள் வாங்கி கொடுத்தால் ரூ. 50 லட்சம் தருவேன்

admin

Leave a Comment