நாகர்கோவிலில் இறுதி கட்டத்தை எட்டிய தேர்தல் பிரசாரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளையொட்டி, நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் இறுதி கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம், நாகர்கோவிலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மத்திய மாநில அரசுகளின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களுடன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று, விநியோகித்து வருகின்றனர். அதற்கு அப்பகுதியில் பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.

Related posts

ஜி.கே.மூப்பனார் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை கருணாநிதி தடுத்துவிட்டார் – அமைச்சர் காமராஜ்

admin

விடுதலை சிறுத்த வேட்பாளரை புறக்கணித்த திமுகவினர்

NewsJ Election

சாதிக் பாட்ஷா மரணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது : வைகோ பல்டி

admin

Leave a Comment