திருவள்ளூர் மக்களவைத் தொகுதி

தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக தலைநகரை நோக்கி மக்கள் வந்தவண்ணம் இருப்பதால், சென்னையின் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பின்போது தமிழகத்தின் பல பகுதிகளில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. உயர்ந்து வரும் மக்கள் தொகையால், சென்னையில் தொகுதிகள் எண்ணிக்கை உயர்ந்தது. அவ்வாறு புதிதாக உருவான தொகுதி திருவள்ளூர்.

1950களில் திருவள்ளூர் பெயரில் மக்களவை தொகுதி இருந்துள்ளது. ஆனால் அப்போது இருந்த திருவள்ளூர் தொகுதியும், அதனுள் இருந்த சட்டப்பேரவை தொகுதிகளும், வேறானாவை. 2009-ம் ஆண்டு தனித்தொகுதியாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் மக்களவை தொகுதி, சென்னை நகரின் சில பகுதிகளையும், புறநகர் பகுதிகளையும் கொண்டது.

இதில் இடம் பெற்றுள்ள கும்மிடிபூண்டி, பொன்னேரி தவிர மற்ற பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம். இவற்றில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் தொகுதி இது.

நேரடி போட்டி: அதிமுக-காங்கிரஸ்

தொகுதி மறுசீரமைப்பு

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி(இப்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்:

1.கும்மிடிப்பூண்டி (1)
2.பொன்னேரி (SC) (2)
3.திருவள்ளூர் (4)
4.பூந்தமல்லி (SC) (5)
5.ஆவடி (6)
6.மாதவரம் (9)

2019 திருவள்ளூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:

வ.எண்  கட்சிவேட்பாளர் பெயர்
1.  அதிமுகவேணுகோபால்
2.  காங்கிரஸ்ஜெயக்குமார்
3.    அமமுகபொன்.ராஜா
4. மநீம டாக்டர்.லோக ரங்கன்

மக்களின் எதிர்பார்ப்புகள்:

Related posts

தேனி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

விருதுநகர் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

Leave a Comment