அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது – துணை முதலமைச்சர் சூளுரை

தேர்தலில் பொதுமக்கள் எஜமானர்களாக இருந்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது தினகரன் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் பேசிய துணை முதலமைச்சர், அதிமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் கூறி வாக்கு சேகரித்தார்.மேலும் தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். முந்தைய திமுக ஆட்சியில் எவ்வித திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துக்கூறினார்.

Related posts

இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்

NewsJ Election

மக்களவை தேர்தல்: இறுதிகட்ட பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி

NewsJ Election

விசிக பிரமுகர் காரிலிருந்து ரூ2.10கோடி பறிமுதல்

NewsJ Election

Leave a Comment