விருதுநகர் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

இந்தியாவின் வணிக தலைநகரமாக எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், டின் தொழில்களில் முற்றொருமை பெற்று விளங்குகிறது விருதுநகர் மக்களவை தொகுதி. பல தமிழக முதலமைச்சர்களை (குமாரசாமி ராஜா, காமராஜர்) தந்த மாவட்டமாக விருதுநகர் மக்களவை தொகுதி உள்ளது.

விருதுநகரில் இருக்கும் புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது.

விருதுநகரில் சிவகாசி பட்டாசு, காலண்டர், டைரி, பாட புத்தகங்கள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகிறது. ஆசியாவிலேயே பேண்டஜ் துணிகள் தயாரிப்பில் சத்திரப்பட்டியும், கைத்தறி நெசவுத்தொழில் தயாரிப்பில் அருப்புகோட்டையும் சிறந்து விளங்குகிறது. மேலும், விருதுநகரில் தீப்பெட்டி தொழில் உலக அளவில் முன்னணயில் உள்ளது.

இம்மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பெயர் போனது. அரசு பொதுத்தேர்வுகளில் பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு:

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

சட்டமன்ற தொகுதிகள்:

  1. திருப்பரங்குன்றம்
  2. திருமங்கலம்
  3. சாத்தூர்
  4. சிவகாசி
  5. விருதுநகர்
  6. அருப்புக்கோட்டை

2019 வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:

வ.எண்  கட்சிவேட்பாளர் பெயர்
1.  தேமுதிகஅழகர்சாமி
2.  காங்கிரஸ்மாணிக்கம் தாகூர்
3.    அமமுகஎஸ். பரமசிவ ஐயப்பன்
4. மநீம முனியசாமி

மக்களின் எதிர்பார்ப்புகள்:

• பட்டாசு, தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை.

• அருப்புக்கோட்டையில் நெசவாளர்களுக்கு தொழில் பூங்கா.

• விருதுநகரில் 4 வழிச்சாலை மற்றும் மேம்பாலங்கள் அமைப்பது.

• மதுரை – கன்னியாகுமரி வரை இரட்டை ரயில்பாதை.


Related posts

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி-ஒரு பார்வை

NewsJ Election

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி

NewsJ Election

பெரம்பலூர் மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

Leave a Comment