நாகப்பட்டினம் மக்களவை தொகுதி-ஒரு பார்வை

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுள் ஒன்று.நாகப்பட்டினம் மாவட்டமானது வரலாற்று சிறப்பு கொண்ட இடமாகும்.சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக பகுதியாக விளங்கியது.இம்மாவட்டத்தை சுருக்கமாக நாகை எனவும் அழைப்பர்.இது கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு மீன் பிடி தொழில் அதிகளவில் செய்யப்படுகிறது.

2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் ,அதிமுக 2 முறையும், சிபிஐ 5 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது.நாகப்பட்டினம் மக்களவை தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு சதவீதமானது 2009 ஆண்டில் 77.71% சதவீதமும்,2014 ஆண்டில் 77.64 %சதவீதம் பதிவாகியுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு:

நாகை மக்களவைத் தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்:

  • நாகப்பட்டினம்
  • கீழ்வேளூர்
  • வேதாரண்யம்
  • திருத்துறைப்பூண்டி
  • திருவாரூர்
  • நன்னிலம்

2019 நாகப்பட்டினம் மக்களவை தொகுதி வேட்பாளர்கள்:

வ.எண்  கட்சிவேட்பாளர் பெயர்
1.  அதிமுகஎம்.சரவணன்
2.  இந்திய.கம்யூசெல்வராசு
3.    அமமுக செங்கொடி
4.ம.நீ.ம குருவைய்யா

மக்களின் எதிர்பார்ப்புகள்:

  • மீன்பிடி தொழிலை முன்னேற்ற திட்டங்கள் கொண்டு வரவேண்டும்
  • தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும்
  • சுற்றுலா தளங்களை முறையாக பராமரித்து மக்களின் வரவை அதிகரிக்க வேண்டும்
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும்

Related posts

ஈரோடு மக்களவை தொகுதி-ஒரு பார்வை

NewsJ Election

திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

தர்மபுரி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

Leave a Comment