மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் ஓய்கிறது

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மறுநாள் ஓய்கிறது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தேர்தலுடன் இணைந்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் வரும் 16 ம் தேதி மாலை பிரசாரம் ஓய்கிறது. இந்த நிலையில் தலைவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூரில் தம்பிதுரையை ஆதரித்து பிரசாரம் செய்தார். இன்று கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். நாளை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதேபோல துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Related posts

துரைமுருகன் வீடு, நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வழக்குப்பதிவு – தேர்தல் ஆணையம்

NewsJ Election

தேர்தலுக்கு பின் திமுக கட்சியே இல்லாமல் போகும் – ராமதாஸ்

NewsJ Election

தேர்தல் அதிகாரிகள் சோதனை: பணத்தை கீழே போட்டுவிட்டு தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டம்

NewsJ Election

Leave a Comment