அதிமுகவினர் மீது தினகரன் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல்


திருச்சியில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது தினகரன் ஆதரவாளர்கள் பயங்கர ஆயூதங்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். பிரசாரம் முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருச்சி சாத்தனூர் பகுதியில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் கந்தசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வாக்குச் சேகரித்தனர்.

அப்போது , பிரபல ரவுடியும், தினகரன் ஆதரவாளருமான சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் வந்த 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த கந்தசாமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் அவரை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் -சரத்குமார்

NewsJ Election

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

admin

தேனி அதிமுக வேட்பாளருக்கு துணை முதலமைச்சர் வாக்கு சேகரிப்பு

NewsJ Election

Leave a Comment