சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் குடிநீர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன்…

தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் குடிநீர் பிரச்சனையையும் தீர்த்து வைப்பதாக, வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பிரசாரம் செய்தார். கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் நகரம் முழுவதும் வீதிவீதியாக திறந்தவெளி வாகனத்தில் ஏறி பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். நகர் பகுதியில் ஏராளமான பெண்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இசை முழங்க, ஆடல் பாடல் நடனத்துடன் கூடிய உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

சாலையில் இரு புறங்களிலும் பெண்கள் கையில் ஆரத்தி தட்டுகள் உடன் மலர் தூவி வரவேற்றனர். சின்னமனூர் நகராட்சிகளில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அனைத்து வார்டுகளிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று கூட்டத்தில் பேசிய ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

பாமக வேட்பாளர் சாம் பால்-ஐ ஆதரித்து ஸ்மிருதி இரானி பிரசாரம்

NewsJ Election

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணிமனையை துணை முதல்வர் திறந்து வைத்தார்

NewsJ Election

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

admin

Leave a Comment