திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகள்

சேலத்தில், ஆரத்தி எடுத்த பெண்களை உதாசீனப் படுத்திய திமுக வேட்பாளரின் செயல், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டியில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி வாக்கு சேகரித்தார். அவரை வரவேற்று ஆரத்தி எடுப்பதற்காக பெண்களுடன் பள்ளி சிறுமிகளும் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.

பெண்கள் ஆரத்தி எடுத்து கௌதம் சிகாமணியின் நெற்றியில் பொட்டு வைக்க முயன்றபோது, அவர்களின் கையை அவர் தட்டி விட்டார். இச்சம்பவம் அங்கிருந்த மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுக கூட்டங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் தொடர்ந்து அரேங்கேறுவது, மக்களிடையே அக்கட்சிக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சிறுபான்மையினருக்கு துரோகம் விளைவித்த கட்சி திமுக

NewsJ Election

நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு வாக்குசேகரிப்பு

NewsJ Election

கன்னியாகுமரியில் பணம் பட்டுவாடா செய்வதில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல்

NewsJ Election

Leave a Comment