மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் -சரத்குமார்

தூத்துக்குடி மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

விளாத்திக்குளம் அருகேயுள்ள குளத்தூரில் தூத்துக்குடி அதிமுக கூட்டணி மக்களவை வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், கட்சிகளின் கோட்பாடுகள் வேற்றுமையாக இருந்தாலும், ஒற்றுமையாக செயல்பட்டு மத்தியில் நிலையான ஆட்சியை கொண்டு வரவேண்டும் எனவும், பிரதமர் நரேந்திர மோடியே திரும்பவும் பிரதமராக வரவேண்டும் என பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார்.

Related posts

அனைத்து மக்களுக்கும் அதிமுக அரசு அரணாக இருக்கும்

NewsJ Election

பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவோம் : தம்பிதுரை

admin

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாது

admin

Leave a Comment