தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுவார்: விஜய பிரபாகரன்

விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுவார் என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் , சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையில் மிக பிரமாண்டமான கூட்டணி அமைந்துள்ளது என்றும் இந்த கூட்டணி வெற்றி பெறாமல் வேறு எந்தக் கூட்டணி வெற்றிபெறும் என்றும் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் ரவுடியிசம் அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், அழகர்சாமி, வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுவார் என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்

Related posts

அதிமுக கூட்டணியின் வெற்றி திமுகவுக்கு மரண தண்டனையாக அமையும் – பிரேமலதா விஜயகாந்த்

NewsJ Election

தேர்தல் விதிமுறைகளை திமுக வேட்பாளர் கனிமொழி மீறியதாக சர்ச்சை

admin

அதிமுக கூட்டணியின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்

admin

Leave a Comment