வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை ஒட்டி, வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமென ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வாக்களர்கள் அனைவரும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் கட்டாயம் வாக்களித்து, வாக்குப்பதிவில் சாதனை படைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மீண்டும் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டி

admin

தேனியில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

NewsJ Election

காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய், போலித்தனம் நிறைந்தது-பிரதமர் மோடி

NewsJ Election

Leave a Comment