நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது: சேவூர் ராமச்சந்திரன்

அதிமுக அரசின் சாதனைகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி, கடலாடி, கீழ்ப்பாலூர், மேல் பாலுர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

பெண்கள் ஆரத்தி எடுத்தும் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய சேவூர் ராமச்சந்திரன் நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், அதிமுக அரசின் சாதனைகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Related posts

பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

NewsJ Election

கூலிப்படைக்கு ஜாமின் எடுக்கும் ஒரே கட்சி திமுக : முதலமைச்சர் பழனிசாமி

admin

காங். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும்: பிரதமர் மோடி

NewsJ Election

Leave a Comment