தமிழக விவசாயிகள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்பு

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பாஜக தேடிய தலைவர் அமித் ஷா இல்லத்தில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, முக்கிய கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த சத்திப்பின்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகீயோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, அமித் ஷாவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக கூறினார். நதிகளை இணைக்க வேண்டும், அனைத்து விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் அய்யாக்கண்ணு கூறினார்.

Related posts

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

admin

துரைமுருகன் வீடு, நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வழக்குப்பதிவு – தேர்தல் ஆணையம்

NewsJ Election

அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும்

NewsJ Election

Leave a Comment