அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும்

அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து, சத்தியமங்கலம் அருகேயுள்ள காவிலிபாளையம் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தற்போது, ஈரோடு மாவட்டம், நசியனூருக்கு அருகில் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெறும் என்று கூறினார். பவானி ஆற்றில் உபரியாக வரும் நீரை காளிங்கராயன் வாய்க்காலில் தேக்கி, மின் மோட்டார் மூலம் குளம், குட்டைகளை நிரப்பும் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Related posts

அனைத்து மக்களுக்கும் அதிமுக அரசு அரணாக இருக்கும்

NewsJ Election

அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தீவிர தேர்தல் பிரசாரம்

NewsJ Election

மக்களவை தேர்தலில் போட்டியிடும் ம.நீ.ம. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

admin

Leave a Comment