காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – 2019

 1. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
 2. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
 3. மத்திய அரசிலுள்ள 22 லட்ச  காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
 4. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
 5. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
 6. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 7. பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.
 8. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்படும்.
 9. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
 10. தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்களை தடுக்கப்படும்.
 11. 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.
 12. 2023 – 24ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
 13. மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
 14. காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ.1500 கட்டாயம் வழங்கப்படும்

admin

அமமுக தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

Leave a Comment