திமுக தேர்தல் அறிக்கை – 2019


1.தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழ் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

2.  மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

3. தனிநபர் வருமானம் 1,50000 ஆக உயர்த்தப்படும்.

4. வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

5. மத்திய அரசின் மொத்தவரி 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடையத் தேவையான ஊக்கம் கிடைத்திட மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும் , பாரபட்சம் இல்லாமல் நிதி பங்கீடு செய்யப்படும்.

6. மத்திய நிதி குழுவின் அமைப்பும் அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்படும்.

7. தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 8,000 ஆக நிர்ணயக்கப்படும்.

8. பாஜக அரசின் தவறான முடிவுகளால் இன்றைக்கு சிதைந்துப்போன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லூநர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்.

9.  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

10. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு, முன்பு இருந்ததுபோல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

11. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுகு திரும்ப அளிக்கப்படும்.

12. சரக்கு மற்றும் சேவை வரி அதிகபட்சமாக 28 சதவிகிதம் வரை இருப்பதால் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பை போக்கிட ஜிஎஸ்டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.

13. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

14. பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேர் சாலைப் பணியாளராக பணியமர்த்தப்படுவார்கள்.

15. சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

16. கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

17. முல்லை பெரியாறு மற்றும் காவிரி ஆற்றில் மேகதாதுவில் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிற்த்தப்படும்.

18. தென்னிந்திய நதிகள் இணைக்கப்படும்.

19. 1976-ல் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.

20. மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் சினிமா காமெடியை நிஜமாக்கிய திமுகவினர்

NewsJ Election

சம்பந்தமின்றி ஏதேதோ பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா

NewsJ Election

Leave a Comment