அதிமுக தேர்தல் அறிக்கை – 2019

1) அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம்

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள், கைவிடப்பட்ட பெண்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்களுக்கு அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1500 வழங்கும் திட்டம்.

2) எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டம்

இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உலகெங்கும் வேலை வாய்ப்பு கிடைத்திடும் வண்ணம் எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

3) நீர் மேலாண்மை சிறப்புத் திட்டம்

நொய்யல்  ஆற்றையும், மேற்கு தொடர்ச்சி மலையையும் மையமாகக் கொண்டு பருவகாலங்களில் பெய்யும் மழைநீரை கோவையை சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகள் அமைத்து  நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.

காவேரி ஆற்றின் மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல், மோகனூர், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று  நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.

அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம்.

மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் சரபங்கா நதிக்கும், மாவட்ட ஏரிகளுக்கும் கொண்டு செல்லும் திட்டம்.

4) பொருளாதாரக் கொள்கை

விவசாயம், தொழில் துறை, சேவைத் துறைகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கவும், கடன் பெறுவதற்கான கடுமையான நிபந்தனைகளை தளர்த்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்படும்.   

பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்படும்.

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை கொண்டு வரும் கொள்கையை கைவிடுமாறு வலியுறுத்தப்படும்.

வேளாண்மை  மற்றும் தொழில்துறையின் உற்பத்தி அளவை குறிப்பிட்ட காலத்தில் அடைய உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.

5) கல்விக் கொள்கை

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இந்தியாவில் உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

6) பொதுவிநியோகத்திட்டம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான இட ஒதுக்கீட்டை முழுஅளவில் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

7) மகளிர் நலன் மற்றும் சமூக நீதி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த மக்களுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தவும், அதற்கான சட்டம் கொண்டு வரவும் அதிமுக பாடுபடும்.

தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் மற்றும் தமிழ்நாடு தொட்டில் குழந்தைகள் திட்டங்களை தேசிய திட்டங்களாக அனைத்து மாநிலங்களில் செயல்படுத்த வலியுறுத்தப்படும்.

பாலியல் வன்கொடுமைகள், குழந்தை தொழிலாளர்கள் சித்திரவதையை முற்றிலுமாக களையும் வண்ணம் கடுமையான சட்டம் இயற்ற மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

8) மீனவர் நலன்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அத்துமீறிய தாக்குதல்களுக்கு உடனடி தீர்வு காண  மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

கடலோர மற்றும் உள்நாட்டு மீனவர்களின் சமூக பொருளாதார நலனை மேம்படுத்த ” தேசிய மீனவர் நல ஆணையம்” அமைத்திட மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு தலா ரூ.7000 ஈட்டுத் தொகையாக வழங்க மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

9) நெசவாளர்  நலன்

கைத்தறி உற்பத்தி இனங்களுக்கு சரக்கு  மற்றும் சேவை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு குறைந்த வட்டியுடனான அபிவிருத்தி கடன்கள் வழங்க மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

10) தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பின்மை

குடிசைத்தொழில்கள் மற்றும் சிறு,குறு தொழில்கள் வேலை வாய்ப்பு வழங்க வழி வகை செய்யும் என்பதால் அதற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை வகுக்க மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு காலத்தை ஆண்டிற்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டுமென மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

தீன்தயாள் அந்தோதயா திட்டம் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் சுய தொழில் புரிவோரின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

11. இளைஞர் நலன்

 • மாணவர்கள் தேசிய மற்றும் இதர வங்கிகளில் வாங்கிய கல்விக்கடன்கள் முற்றிலும் தள்ளுபடி.
 • மாவட்டங்கள் தோறும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள்
 • படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை தகுதிக்கேற்ப உதவித்தொகை

12.ஈழத்தமிழருக்கான  நீதி

 • 2009ம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷேவின் ஒப்புதலின்படி கருணாநிதி மற்றும் அவரது நண்பர்களின் மறைமுக நடவடிக்கைகளால் கொன்றழிக்கப்பட்ட ஈழத் தமிழர் படுகொலை நிகழ்வுக்கு சர்வதேச விசாரணை
 • ஈழத் தமிழர் மறுவாழ்வை உறுதி செய்யும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளை உறுதி செய்தல்

13 ) கச்சத்தீவு மீட்பு

 • 1974,1976ம் ஆண்டுகளில் திமுக ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டு,
 • பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை நிரந்தரமாக நிலைநாட்டி,
 • 1960 பெருபாரி வழக்கின் தீர்ப்பின்படி இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை.

14.மதச்சார்பின்மை

 • இந்தியாவின் மதச்சார்பின்மையை உறுதிசெய்யும் வகையில் , மதம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்தல்

15)மொழிக்கொள்கை

 • தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தல்
 • உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க வலியுறுத்தல்
 • இந்தி திணிப்பை நிறுத்த வலியுறுத்தல்
 • மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி பெயர் சூட்டுவதை நிறுத்தி தமிழ் பெயர் சூட்ட வலியுறுத்தல்

16) மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு

 • மத்திய அரசின் வருவாயில் 60%-ஐ 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்  மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அதிமுக வலியுறுத்தும்.
 • சரக்கு மற்றும் சேவை வருவாய் பங்கீட்டு சட்டத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள வரி வருவாய் இழப்பை சரி செய்ய குறைந்தது 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீட்டை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

17.நதிகள் இணைப்பு கொள்கை

 • தமிழக கிராமப்பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க கோதாவரி-காவிரி இணைப்பை இணைப்பு செயல்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
 • முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 157 அடியாக உயர்த்துவதை தடுக்கும்வகையில் சட்டவிரோதமாக கேரளா எடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தல்
 • காவிர்,கீழ் கொள்ளிடம், வெண்ணாறு, கீழ் பவானி உள்ளிட்ட நீர்மூலங்களின் உப வடிநிலம் கொண்டு வந்து காவிரி வடிநிலத்தை நவீனப்படுத்தல்.

18) மத்திய அரசின் மின் உற்பத்தி திட்டங்கள்

 • தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம், நெய்வேலி ஆகிய மத்திய அரசின் மின் உற்பத்தி திட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே வழங்கவும், தமிழகத்தின் தேவை போகவே மற்ற மாநிலங்களுக்கு விநியோகிக்கவும் மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

19.மாசுக்கட்டுப்பாடு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்கள்

 • திருப்பூர் , ஈரோடு, கரூர், வேலூர் சுற்றுவட்டாரபகுதிகளில் இருக்கும் சாயப்பட்டறைக் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்க மற்றும் தேசிய அளவில் வாகன புகை மாசைக் கட்டுப்படுத்த உரிய தொழில்நுட்பத்துடன் வழிவகை செய்யபடும்

20) புலம் பெயர்ந்தோர் நலன்

தமிழர்கள் அதிகளாய் வாழும் அயல்நாடுகளில் தமிழர்களையே இந்திய தூதுவர்களாக நியமிக்க வேண்டுமென மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்.

21) சிறுபான்மையினர் நலன்

மத உரிமை, மதம் சார்ந்த இதர உரிமைகளுக்கு எதிரான சிவில் சட்டம் எந்த வடிவத்திலும் ,ஒருபோதும் நிறைவேற்றப்படக்கூடாது என மத்திய அரசிடம்  வலியுறுத்தப்படும்

22.குடிநீர்

 • கிராமங்கள் தோறும் சுகாதாரமான குடிநீர்த் திட்டங்கள்
 • முன்னுரிமை அடிப்படையில் தேசிய ஊரகத் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்

23.சாலை போக்குவரத்து

 • தேசிய நெடுஞ்சாலை 45 மற்றும் 4 ல் நீளசாலையை எட்டு வழி சாலையாக மாற்றும் திட்டம்.

24.ரயில்வே

 • சென்னை மெட்ரோ திட்டம் பகுதி – 2ன் கீழ் 118.9 கி.மீ மெட்ரோ திட்டம்.
 • தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லும் வகையில் உத்தரவு பிறப்பிக்க மத்திய் அரசுக்கு வலியுறுத்தல்

25) நவீன விமான நிலையங்கள்

கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி,சேலம் ஆகிய விமான நிலையங்களை விரிவாக்கம்  செய்து நவீன மயமாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

26) மின் ஆளுமை நிர்வாகம்

ஊழலை ஒழிக்கும் வகையில் அரசின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பம் நிறைந்த முழுமையான மின் ஆளுமை திட்டத்தை செயல்படுத்த  மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

27) நவீன பறக்கும் கப்பல் திட்டம்

கிழக்கு கடற்கரை சாலையின் சுற்றுலா மற்றும் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த “ஹோவர்கிராப்ட் ” எனும் பறக்கும் கப்பல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

28) குடிமராமத்து திட்டங்கள்

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை நிர்வாகங்களுக்கு உட்பட்ட அனைத்துவகை நீர்நிலைகளில் குடிமராமத்து திட்டங்கள் மேற்கொள்ள அதிக  நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

29)  நீதித்துறை

உச்சநீதிமன்றத்தின் மண்டல அளவிலான கிளை ஒன்றை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

30. சடப்பிரிவு 356 ஐ நீக்குதல்

 • மக்கள் தேர்ந்தெடுத்த அரசைக் கலைக்கும் உரிமையை மத்திய அரசுக்கு வழங்கும் சடப்பிரிவை முழுமையாக நீக்க வலியுறுத்தல்

31.தோட்டக்கலை – விவசாயிகள் நலன்

 • சிறு, குறு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய உறுதியான கொள்கையை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தல்
 • மாவட்டத் தலைநகர்தோறும் மிகப்பெரிய உணவுப்பூங்காக்கள்  அமைக்கப்படும்.
 • காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தல்

32.சூரிய மின்சக்தி

 • அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சுரிய மின்சாரம் செயல்படுத்தப்பட சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

33.கஜா புயல் நிவாரணம்

 • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடியிருப்பு வீடுகள் அமைத்துதர, நிதியை காலம் தாழ்த்தாமல் வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

34.கூவம் சீரமைப்பு

 • லண்டன்மாநகர் தேம்ஸ் நதியை போல கூவம் நதியை போக்குவரத்து மற்றும் மகிழ்ச்சி சுற்றுலா மையமாக மாற்ற , சிறப்பு மைய நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தல்

35.ஐநா வில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட நடவடிக்கை

 • ஐநா வின் பாதுகாப்புக்குழுவில் இந்தியா நிரந்தர உறூப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட தேவையான அனுகுமுறைகளைக் கையாள மத்திய அரசை வலியுறுத்தல்

36.புதுச்சேரிக்கு சுயாட்சி தகுதி:

 • புதுச்சேரியை மக்களின் விருப்பத்திற்கேற்ப தனிமாநிலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

37.கேபிள் கட்டண குறைப்பு

 • டிடிஎச் (DTH) கட்டணங்கள் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

38.வருமான வரி விலக்கு

 • வரிவிலக்கு வரம்பு ரூபாய் 8 லட்சமாகவும், நிலையான கழிவு (Standard Deduction)  1 லட்சமாகவும் உயர்த்தப்பட மத்திய அரசை வலியுறுத்தல்

Related posts

மக்களவை தேர்தல்: தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

admin

அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக உள்ளது

admin

அமமுக தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

Leave a Comment