அமமுக தேர்தல் அறிக்கை – 2019

தமிழகத்தை 6 மண்டலமாக பிரித்து தொழில் பூங்கா உருவாக்கப்படும்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.

முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும்

7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்; மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படம்

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

வெளிநாடு தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க தனி வாரியம் சென்னையில் செயல்படுத்தப்படும்.

6 முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும்.

385 ஊராட்சிகளில் அம்மா கிராமப்புர வங்கிகாவலர்கள் தற்கொலை தடுக்க மாவட்ட வாரியாக உளவியல் நிபுணர்களை கொண்டு தனி குழு அமைக்கப்படும்.

கச்சதீவு திரும்ப பெற அமமுக பாடுபடும்.

Related posts

திமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி : அன்புமணி ராமதாஸ்

admin

மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – 2019

NewsJ Election

Leave a Comment