திருநெல்வேலி மக்களவை தொகுதி-ஒரு பார்வை

தமிழகத்தின் கிராமங்கள் அதிகம் நிறைந்துள்ள மாவட்டங்களில் முதன்மையானது திருநெல்வேலி மக்களவை தொகுதியாகும். ஐவகை நிலங்கள், தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு, அதிக அணைகள் கொண்ட மாவட்டம், வற்றாத ஜீவநதி தாமிரபரணி என பல சிறப்புகளை கொண்டது திருநெல்வேலி மாவட்டம் தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ஊராகும்.

விவசாயம், பீடித்தொழில் மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றை பிரதான தொழிலாக கொண்ட திருநெல்வேலி இதுவரை 16 முறை மக்களவை தேர்தலை சந்தித்துள்ளது. இதில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும், இதர கட்சிகள் 2 முறையும் வென்றுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் 1,26,099 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சி.தேவதாசசுந்தரத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தொகுதி மறுசீரமைப்பு:

தொகுதி மறுசீரமைப்பின்போது விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி நீக்கப்பட்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்:

1.திருநெல்வேலி

2.பாளையங்கோட்டை

3.ஆலங்குளம்

4.அம்பாசமுத்திரம்

5.நாங்குநேரி

6.இராதாபுரம்

2019 மக்களவை தொகுதி வேட்பாளர்கள்

வ.எண் கட்சியின் பெயர் வேட்பாளர் பெயர்
1 அதிமுக பி.எச்.பால் மனோஜ் பாண்டியன்
2 திமுக சா.ஞான திரவியம்
3 அமமுக மைக்கேல் ராயப்பன்
4 ம.நீ.ம என்.வென்னிமலை
5 நா.த.க சத்யா

மக்களின் எதிர்பார்ப்புகள்:

  • நாங்குநேரி,கங்கை கொண்டான் பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
  • இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
  • திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும்.
  • தாமிரபரணி ஆற்றில் வெள்ள உபரிநீரை சேகரிக்க தடுப்பணை கட்ட வேண்டும்.

Related posts

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி-ஒரு பார்வை

NewsJ Election

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட மாணவர்களின் கல்வி கடன் ரத்து

admin

மக்களவை, சட்டமன்ற தேர்தல்களுக்கான செலவின பார்வையாளர் நியமனம்: சத்யபிரதா சாஹு தகவல்

admin

Leave a Comment