அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக உள்ளது

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்காலத்தை செம்மை படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சி தலைவருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவர் கார்த்திக், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் முன்னிலையில் தனது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக குறிப்பிட்டார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வரும் காலங்களில் மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் விதமாக தேர்தல் அறிக்கை உள்ளது அவர் தெரிவித்தார். 

Related posts

2014 தேர்தல் முடிவுகள்:பெரம்பலூர் மக்களவை தொகுதி

NewsJ Election

முதல்வரின் இன்றைய தேர்தல் சுற்றுப் பயண விவரம்

NewsJ Election

தேர்தலுக்கு பின் திமுக கட்சியே இல்லாமல் போகும் – ராமதாஸ்

NewsJ Election

Leave a Comment