அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ.1500 கட்டாயம் வழங்கப்படும்

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 1500 ரூபாய் மாதம் தோறும் கட்டாயம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டமும், தேர்தல் பணிக்குழுவின் சார்பாக தேர்தல் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, துணை முதலமைச்சர் பேசும் போது, அதிமுக அரசு அறிவித்த எந்த ஒரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருந்ததில்லை என்றும், அதே போன்று, அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 1500 ரூபாய் மாதம் தோறும் கட்டாயம் வழங்கப்படும் என்றும் பேசினார்.

Related posts

பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவோம் : தம்பிதுரை

admin

கன்னியாகுமரிக்காக எதிர்க் கட்சிகள் சிறுதுரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்

admin

உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் சினிமா காமெடியை நிஜமாக்கிய திமுகவினர்

NewsJ Election

Leave a Comment