இந்திய விமானப்படை தாக்குதலை சந்தேகிக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : பிரதமர் மோடி

இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலை சந்தேகிக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் கட்சி பிரமுகர் சாம் பிட்ரோடா. இவர் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து தான் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்திய ராணுவம் அங்கு, எந்தெந்த நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது எனவும் அண்மையில் சாம் பிட்ரோடா கேள்வி எழுப்பியிருந்தார்.அதுமட்டுமில்லாமல் இந்திய ராணுவம் உண்மையிலேயே 300 தீவிரவாதிகளைக் கொன்றதா ? என்றும் கேட்டிருந்தார்.

சாம் பிட்ரோடாவின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவரின் ஆலோசகர் பாகிஸ்தானின் தேசிய நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாக கூறியுள்ள அவர், இந்திய ராணுவப் படைகளை அவமானப்படுத்தி அவர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார் எனவும் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

நமது ராணுவப் படையை, எதிர்கட்சிகள் மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தி வருவதால், எதிர்கட்சித் தலைவர்களை பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related posts

காலி நாற்காலிகளை பார்த்து அதிருப்தியடைந்த டிடிவி

NewsJ Election

திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் பொய் மட்டுமே பேசுவார்கள்:முதல்வர் குற்றச்சாட்டு

NewsJ Election

மீண்டும் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டி

admin

Leave a Comment