நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கையில் தகவல்

மக்களவை தேர்தலையொட்டி, தி.மு.க. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்களிலும், தமிழிலேயே செயல்படதக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

4-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.16% வாக்குப்பதிவு

NewsJ Election

திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா ? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

NewsJ Election

தமிழக விவசாயிகள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்பு

NewsJ Election

Leave a Comment