ஜி.கே.மூப்பனார் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை கருணாநிதி தடுத்துவிட்டார் – அமைச்சர் காமராஜ்

ஜி.கே.மூப்பனார் என்னும் தமிழர் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தடுத்துவிட்டார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், தஞ்சை நாடாளுமன்றத்தின் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.

இதில் தேமுதிக, பாஜக, பாமக, தமாகா, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஜி.கே.மூப்பனார் என்னும் தமிழர் பிரதமர் ஆகின்ற வாய்ப்பை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தடுத்துவிட்டார் என்றும், மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய 6 ஆயிரம் ரூபாய் நிதித்திட்டம், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படயிருக்கிறது என்றும் கூறினார்.

Related posts

கடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்

NewsJ Election

பாஜக கூட்டணிக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வர வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே

NewsJ Election

தேமுதிக கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார்

admin

Leave a Comment