கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றிபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் கோவிந்தசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிமுகம் செய்துவைத்தார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுகக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, பேசிய ராமதாஸ், மாநிலங்கள் நலன் சார்ந்த திட்டங்கள் பாமக – அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறினார். மேலும், அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றிபெறும் என்று கூறினார்.

Related posts

5 ஆண்டுகள் நல்லாட்சி தந்த பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்

NewsJ Election

தமிழகத்தில் சாதி மற்றும் மத கலவரங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது -துணை முதலமைச்சர்

NewsJ Election

தேனி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

NewsJ Election

Leave a Comment