மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும், தமிழிலேயே செயல்படதக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ.1500 கட்டாயம் வழங்கப்படும்

admin

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

admin

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

admin

Leave a Comment