மக்களவை தேர்தலுக்குப்பிறகு தி.மு.க. இருக்காது

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குப்பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு அதிமுக வேட்பாளரான காளியப்பனை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது, எதிரியும் துரோகியும் இணைகின்ற இந்த தேர்தலில் அவர்கள் ஒழிய வேண்டும் என திமுகவையும் காங்கிரஸையும் அவர் கடுமையாக சாடினார்.

மேலும், அதிமுகவின் சாதனைகளையும், மத்திய அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து கூறி மத்தியில் மோடி தலைமையில் நல்லாட்சி தொடர நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என பேசினார்.

Related posts

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது – துணை முதலமைச்சர் சூளுரை

NewsJ Election

எதிர்கட்சியினர் மீது பொய் புகார் கூறுவதை விட்டு விடுங்கள்: திமுகவினருக்கு சாம்பால் அறிவுறுத்தல்

NewsJ Election

அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக உள்ளது

admin

Leave a Comment