நாகரிகமற்று பேசும் திமுக அரசியல்வாதிகளில் ஆ.ராசா முதன்மையானவர்

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆ.ராசா பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக சிறை சென்றவர். அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்திருந்தாலும் சிபிஐயும் அமலாக்கத்துறையும் அதனை ஏற்காமல் மேல் முறையீடு செய்திருக்கின்றன. இப்படிப்பட்டவரின் சொத்து மதிப்பு 3 கோடி ரூபாய் என்றால் நம்புவீர்களா?

2014 மக்களவை தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்டு தோற்றுப்போன ஆ.ராசா, மீண்டும் அதே நீலகிரி தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுகிறார். நாகரிகமற்று பேசும் திமுக அரசியல் வாதிகளில் ஆ.ராசா முதன்மையானவர். எதிரிகளையும் மனம் நோகாமல் பேசும் அரசியல் மாண்புள்ளவர்கள் மத்தியில் அநாகரிக பேச்சுகளை மேடை பேச்சாக தொடர்ந்து செய்து வரும் ஆ.ராசா பல அவதூறு வழக்குகளுக்கு சொந்தக்காரர்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இந்த முறைகேட்டில் கைது செய்யப்பட்டு பின்பு பிணையில் வெளியே வந்தவர்.

2 ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் ஆ.ராசாவை விடுவித்திருந்தாலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆ.ராசாவின் நண்பராக அறியப்பட்டவர் சாதிக் பாட்சா. க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த சாதிக் பாட்சா கடந்த 2011ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். அவர் இறந்த சமயம் 2ஜி வழக்கு விசாரனை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 2ஜி வழக்கு தொடர்பாக சாதிக் பாட்சா வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது. இதனால் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. சாதிக் பாட்சாவின் மரணத்தை அவரது குடுபத்த்தினர் கூடா நட்பு கேடாய் முடிந்தது என இன்றளவும் வர்ணித்து வருகின்றனர்.

2ஜி வழக்கில் பாட்ஷா உண்மையை சொல்லி விடுவார் என்ற பயத்தில் ஆ.ராசாவின் கூட்டாளிகள் மர்மமான முறையில் அவரை கொன்றதாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ பலமுறை ஊடகங்களில் குற்றம் சாட்டியுள்ளார். சாதிக் பாட்ஷாவின் மர்ம மரணத்திற்கு பதில் சொல்ல முடியாமல் திமுக, திணறுவது ஊர் அறிந்த உண்மை.

இது ஒருபுறம் இருக்க கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஆ.ராசா தனக்கு 3 கோடியே 61 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். ஆ.ராசா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவை தொகை மட்டுமே 25 லட்சத்து 52 ஆயிரத்து 260 ரூபாய் உள்ளது. அவரது பரம்பரை சொத்தில், 3 லட்சத்து 24 ஆயிரத்து 420 ரூபாய் வரி செலுத்தப்படாமல் உள்ளது. ஆ.ராசாவுக்கு அசையும் சொத்துக்களாக 1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 850 ரூபாய், மனைவி பரமேஸ்வரி பெயரில் 93 லட்சத்து 93 ஆயிரத்து 597 ரூபாய் உள்ளது. மகள் மயூரி பெயரில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 400 ரூபாயும் பரம்பரை சொத்தாக 41 லட்சத்து 3 ஆயிரத்து 540 ரூபாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சொத்து மதிப்பினை கேட்கும் போது இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என நடிகர் விமல், ஒரு படத்தில் பேசும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

Related posts

2014 தேர்தல் முடிவுகள்:ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி

NewsJ Election

கன்னியாகுமரி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

NewsJ Election

Leave a Comment