தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 33 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 33 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்பரல் 18 தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினரும், கண்காணிப்புக் குழுவும் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் 19-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 22 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இரண்டாம் நாள் முடிவில் 33 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அரசியல் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை துவங்கியுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

Related posts

மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் -சரத்குமார்

NewsJ Election

அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் : சரத்குமார்

NewsJ Election

அனைத்து மக்களுக்கும் அதிமுக அரசு அரணாக இருக்கும்

NewsJ Election

Leave a Comment