18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பட்டியலை வெளியிட்டனர்.

பூந்தமல்லியில் வைதியநாதனும், பெரம்பூர் தொகுதியில் ஆர்.எஸ் ராஜேஷூம், திருப்போரூரில் எஸ் ஆறுமுகமும் போட்டியிடுகின்றனர். சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சம்பத், குடியாத்தம் தனி தொகுதியில் கஸ்பா ஆர் மூர்த்தி, ஆம்பூரில் ஜோதி ராமலிங்க ராஜா போட்டியிடுகின்றனர்.

இதேபோல் ஒசூர் சட்டமன்ற தொகுதியில் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி, பாப்பிரெட்டிபட்டியில் கோவிந்தசாமி, அரூர் தனி தொகுதியில் சம்பத் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நிலக்கோட்டை தனி தொகுதி தேன்மொழிக்கும், திருவாரூர் தொகுதி ஜீவானந்தத்திற்கும், தஞ்சை காந்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிபட்டியில் லோகி ராஜனும், பெரியகுளம் தனி தொகுதியில் முருகனும் போட்டியிடுகின்றனர்.

பரமக்குடி தனி தொகுதி என் சதன்பிரபாகருக்கும், சாத்தூர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மனுக்கும், விளாத்திகுளம் தொகுதி பி.சின்னப்பனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டிலேயே மின்மிகை மாநிலமாக தமிழகம் இருக்கிறது

NewsJ Election

தேனி மக்களவை தொகுதி – ஒரு பார்வை

NewsJ Election

மதுரையில் திட்டமிட்டபடி மக்களவை தேர்தல் நடைபெறும் : சென்னை உயர்நீதிமன்றம்

admin

Leave a Comment